Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Othavaneswara Swamy Temple, ThiruChotruthurai |

அருள்மிகு கோவிந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு பசுபதீஸ்வர சுவாமி திருக்கோயில்- திண்ணக்கோணம் / நெற்குன்றம்


அருள்மிகு கோவிந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு பாசுபதீஸ்வர சுவாமி திருக்கோயில்- திண்ணக்கோணம் / நெற்குன்றம்



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஸ்வாமி 

இறைவி :ஶ்ரீ கோவிந்தவல்லி / சிவகாமசுந்தரி அம்பாள்

தல மரம் :மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ThiruchiDistrict_Pasupathiswarar Temple_Thinnakonam-shivanTemple


Arulmigu Pasupatheeswarar Swamy Temple, Thinnakonam, | அருள்மிகு கோவிந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு பாசுபதீஸ்வர சுவாமி திருக்கோயில்- திண்ணக்கோணம் / நெற்குன்றம் தல வரலாறு

சம்மந்த பெருமானின் வாக்கில் நெற்குன்றம் என்று போற்றப்படும் இத்தலத்தின் தற்போதைய பெயர் திண்ணக்கோணம்,சுவாமி - பசுபதீஸ்வரர்; பழைய நூலில் 'சடனாண்டார்' என்றும்; அம்பாள் - கோவிந்தவல்லி; சிவகாமசுந்தரி என்றும் உள்ளது.

கோயில் மற்றும் இறைவனின் பெயர்கள் காலப்போக்கில் மாறிப்போயுள்ளன. முதற்பராந்தகச் சோழனின் கல்வெட்டில் இவ்வூர் "திருவிரற்குன்றம்" என்றும், "திருநற்குன்றம்" என்றும், சுவாமியின் பெயர் "திருமாடத்துக் கூனனார்" என்றும், "சடனாண்டார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது என்பர் ஆய்வர் பெருமக்கள். கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் ஒன்றில் ஊர்ப் பெயர் 'தின்னக்கோணம்' என்றும், மற்றொன்றில் 'தின்னக்குணம்' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு திரு நற்குன்றம் என்று ஒரு சிவ ஸ்தலம் இருந்தது. இங்கு என்ன விசேஷம் என்றால் சிவன் ஸ்வயம்பு லிங்கம் அல்ல. ஸ்வயம்பு பசுமாடு உருவம். அதனால் சிவனுக்கு பசுபதீஸ்வரர் என்று பெயர் (பழைய பெயர் சடனாண்டார்) 7.5 அடிஅகலம் 3அடி உயரம். ஒரு கருப்பு பசுமாடு படுத்துக்கொண்டு நம்மை பார்ப்பதுபோல் ஒரு தோற்றம். பராந்தக சோழன்கால கஜ ப்ரஷ்ட கர்பகிரஹம். இடையர்கள் வசித்ததால் நிறைய பசுக்கள் இருந்த ஊர்.

எல்லா பசுவிடமும் பால் இருந்தது. ஒரு பசு தினமும் பால் இன்றி இருந்தது. ஏன்? தினமும் ஒரு புற்று மேடு மேல் பாலை சொறிந்து விட்டு வருகிறதே. இதை கண்ட இடையன் தடியால் பசுவை கோபமாக அடிக்க பசு இறந்து விட்டது. அன்று இரவே பராந்தக சோழன் கனவில் சிவன் தோன்றி ''பராந்தகா, நீ நெற்குன்றம் போ.

அங்கே ஒரு பசு பால் சொறிந்து அடிபட்டு இறந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டு' என ' கட்டளை இட்டார். அதே நேரத்தில், பார்வதிக்கு ஒரு சாப விமோச்சனம் ஆவதற்காக, ''உமா நீ நற்குன்றம் செல். அங்கே ஒரு சிறு குன்று பசுபோல் உருவில் போல் இருக்கும் அதற்கு பூஜை வழிபடு'' என்கிறார். அந்த பசு உருவ சிறிய குன்று தான் இப்போது பசுபதீஸ்வரர் கோவிலாக பராந்தக சோழனால் கட்டப்பட்டது. கோவில் சிதிலமடைந்து அதன் பெயரும் சிதைந்து நற்குன்றம் திரு நெற்குன்றம் ஆகி, சுருங்கி இப்போது தின்னக் கோணம். தூண்கள் சிற்ப வேலைப்பாடு நிறைந்தவை. சகல தோஷ நிவாரணத்திற்கு, பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள். பசுபதீஸ்வரர் பார்ப்பதற்கு வெகு அழகான பசுவாக சாதுவாக இருக்கிறார். பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள் வஸ்திரங்கள் உடலை சுற்றி சார்த்தி படுத்திருந்தால் எப்படி இருக்கும். அது தான் ஸ்வயம்புவாக பசு உருவில் காட்சி தரும் பசுபதீஸ்வரர்.









திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வர சுவாமி திருக்கோயில்
திண்ணக்கோணம் / நெற்குன்றம்
திருச்சி மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:



ஆலயம் அமைவிடம்:

: தமிழ் நாடு முசிறியிலிருந்து வேளக்கா நத்தம் சாலையில் சென்று - ஏவூர் என்னுமிடத்தில் பிரியும் சாலையில் சென்றால் நாச்சம்பட்டியை அடுத்து "திண்ணகோண"த்தை அடையலாம். முசிறியிலிருந் 15 கி.மீ. நகரப் பேருந்து செல்கிறது.